மன் கீ பாத்-க்கு டிஸ்லைக் போட்ட ஆண்டி இண்டியன்ஸ்!? – இது என்ன புது ட்ரெண்டா?

திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (11:17 IST)
மாதம் தோறும் நாட்டு மக்களோடு பிரதமர் உரையாற்றும் மன் கீ பாத் நிகழ்ச்சிக்கு சிலர் தொடர்ந்து டிஸ்லைக் அளித்து ட்ரெண்டாக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டு மக்களுடன் தனது கருத்துகளை பகிர்ந்து கொள்ள பிரதமர் மோடி மாதம்தோறும் மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலமாக பேசி வருகிறார். நேற்று மன் கீ பாத் மூலமாக பேசிய பிரதமர் மோடி பொம்மைகள் செய்வதில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நாட்டு நாய்கள் வளர்ப்பு குறித்து பேசினார்.

பிரதமர் மோடி உரையாற்றும் இந்த மன் கீ பாத் நிகழ்ச்சி அனைத்து All India Radio வானொலிகளிலும் ஒலிபரப்பப்படுவதுடன், News On Air தளத்தில் எப்போது வேண்டுமானாலும் கேட்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாஜகவின் யூட்யூப் சேனலிலும் மன் கீ பாத் நிகழ்ச்சி பதிவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் பிரதமர் பேசிய மன் கீ பாத் நிகழ்ச்சியின் வீடியோவுக்கு பலர் தொடர்ந்து டிஸ்லைக் அளித்து வருகின்றனர்.

லைக் செய்பவர்களை விட அதிகமான டிஸ்லைக் அளிக்கப்படுவதால் மொத்த டிஸ்லைக் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. முன்னதாக சுஷாந்த் சிங் இறப்பில் நெப்போடிசம் உள்ளதாக பேசப்பட்ட நிலையில் ஆல்யா பட் நடித்த சடாக் 2 பட ட்ரெய்லருக்கு 20 மில்லியன் பேர் டிஸ்லைக் செய்தது ட்ரெண்டான நிலையில், தற்போது டிஸ்லைக் செய்து எதிர்ப்பு தெரிவிப்பது ஒரு ட்ரெண்டாக மாறியுள்ளதாக தெரிகிறது.

எதிர்கட்சிகளை சேர்ந்த பலர் பிரதமரின் மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்பை குலைக்க இது போன்ற செயல்களை செய்வதாக பாஜகவினர் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்