பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமண்ய ஸ்வாமி சர்ச்சையானக் கருத்துகளுக்குப் பெயர் போனவருமான சுப்ரமண்ய ஸ்வாமி மற்றக் கட்சித் தலைவர்களை மட்டுமல்லாமல் தன் கட்சித் தலைவர்களையும் தைரியமாக விமர்சிப்பவர். இந்நிலையில் நாட்டின் பொருளாதார மந்தம், வெங்காய விலை உயர்வு ஆகியவற்றைப் பற்றி கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் ‘வெங்காய விலை உயர்வு நமது அரசின் தோல்விதான். மக்களின் கைகளில் பணம் இல்லை. பணம் இருந்தாலும் அதனை செலவு செய்யப் பயப்படுகிறார்கள். பொருளாதாரத்தின் நிலை குறித்து 7முறை பிரதமருக்கு கடிதம் எழுதினேன். பிரதமருக்கு பொருளாதாரம் புரியவேண்டும், அவருக்கு பொருளாதாரம் புரியாது. பொருளாதாரம் மாற்றம் வந்தால் தான் இது எல்லாம் சரியாகும்’ எனக் கூறியுள்ளார். இந்த கருத்து பாஜகவில் சலசலப்பை எழுப்பியுள்ளது.