பாஜகவில் தேர்தலே இல்லை, பிரதமரின் அனுமதியுடன் உறுப்பினர்கள் நியம்னம்: சுப்பிரமணியன் சுவாமி

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (20:31 IST)
பாஜகவில் தேர்தலே இல்லை என்றும், பிரதமரின் அனுமதியுடன் உறுப்பினர்கள் நியம்னம் என ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
பாஜகவின் ஆரம்ப நாட்களில், நாங்கள் கட்சி மற்றும் பாராளுமன்ற கட்சி தேர்தல்கள் மூலம் நிர்வாகிகள் பதவிகளை நிரப்பினோம். கட்சி அரசியலமைப்புக்கு அது தேவை. ஆனால் இன்று பாஜகவில் தேர்தல் இல்லை. ஒவ்வொரு பதவிக்கும் மோடியின் ஒப்புதலுடன் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படுகிறார்.
 
பாஜகவில் அமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நாடாளுமன்ற ஆட்சிமன்றக் குழுவில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்