இந்நிலையில் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய மதுக்குமார், தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த பீரோவிலிருந்து 2 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மதுக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய திருடனை தேடி வந்தனர்.
அந்த லெட்டரை, நகைகளை திருடிச்சென்ற திருடனே எழுதி இருந்தான். அந்த கடிதத்தில் என்னை மன்னிக்கவும். பணக்கஷ்டத்தால் உங்கள் நகைகளை திருடி சென்றேன். இருந்தபோதிலும் வீட்டிற்கு சென்ற என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. மனசாட்சி உறுத்தியது. அதனால் தான் உங்கள் நகைகளை உங்களிடமே ஒப்படைத்துவிட்டேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.