தான் இறந்துவிட்டதாக விடுமுறை கேட்ட மாணவருக்கு பள்ளி முதல்வர் ஒப்புதல்

திங்கள், 2 செப்டம்பர் 2019 (09:06 IST)
பொதுவாக மாணவர்கள் தாத்தா, பாட்டி உள்பட உறவினர்கள் இறந்து விட்டதாகக் கூறி அடிக்கடி விடுமுறை கேட்கும் பழக்கம் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ஒரு மாணவர் தானே இறந்து விட்டதாகவும் அதனால்தான் சீக்கிரம் வீட்டிற்கு போக வேண்டும் என்பதால் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்ட விடுமுறைக்கு, பள்ளி முதல்வரும் ஒப்புக்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரின் பாட்டி இறந்து விட்டார். இதனை அடுத்து முதல்வருக்கு விடுப்பு கடிதம் எழுதிய அந்த மாணவர் பாட்டி இறந்து விட்டதாக குறிப்பிடுவதற்கு பதிலாக, தான் இறந்து விட்டதாகவும், எனவே சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டியிருப்பதால் தனக்கு விடுமுறை வேண்டும் என்றும் கேட்டுள்ளார் 
 
 
அந்த விடுமுறை கடிதத்தை சரியாக படிக்காத பள்ளி முதல்வர் அவருடைய கோரிக்கையை ஏற்று அவருக்கு விடுமுறை அளித்து உள்ளார். இந்த விடுமுறை விண்ணப்பம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு மாணவரின் விடுமுறை விண்ணப்பத்தை சரியாக கவனிக்காமல் ஒப்புதல் அளித்த முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்