மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்த ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் தற்போதுதான் ஓரளவு நிலைமை சீரடைந்துள்ளது. ஆனால் திடீரென தனியார் வங்கிகள் மட்டுமின்றி அரசு பொதுத்துறை வங்கியா பாரத ஸ்டேட் வங்கியும் மினிமம் பேலன்ஸ் ரூ.5000 வைத்திருக்க வேண்டும், இல்லை என்றால் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் அறிவித்துள்ளது.
அஞ்சல் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கினால் குறைந்தபட்சம் ரூ.50 மினிமம் பேல்ன்ஸ் இருந்தால் போதும். மேலும் அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி ஏடிஎம் கார்டு பெற்று அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். அஞ்சல் நிலையங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்குவது மிகவும் எளிது. சேமிப்புக் கணக்குத் தொடங்க புகைப்படம் மற்றும் முகவரி சான்றை அளித்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதே பலர் அஞ்சல் நிலையங்களில் கணக்கு தொடங்க முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.