அது ஸ்டுடியோ அல்ல ; ரெட் லைட் ஏரியா : பட்டையை கிளப்பும் ஸ்ரீரெட்டி

செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (15:56 IST)
தெலுங்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நடிகைகளுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள ஸ்டுடியோக்களை பயன்படுத்துகிறார்கள் என நடிகை ஸ்ரீரெட்டி பகீர் புகாரை கூறியுள்ளார்.

 
திரையுலகில் பட வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கு பழக்கம் உள்ளது நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழில் சுச்சி லீக்ஸ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது போல், தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டி  ஸ்ரீலீக்ஸ் என்கிற தலைப்பில்,  தெலுங்கு பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபர்களை அம்பலப்படுத்துவேன் எனக் கூறி சமூகவலைத்தள பக்கங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
அதன் பின், கடந்த 7ம் தேதி தெலுங்கு சினிமா சேம்பர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னை நடிகர் சங்க உறுப்பினராக அனுமதி அளிக்க மறுப்பதால் இந்த போராட்டம் நடத்துவதாக அவர் கூறியிருந்தார்.

 
மேலும், “தெலுங்கு பட உலகை ஆளும் ஒரு பெரிய தயாரிப்பாளரின் மகன் என்னை ஸ்டுடியோவிற்கு அழைத்தார். அங்கு நான் சென்ற போது என்னை கட்டாயப்படுத்தி என்னுடன் உறவு கொண்டார்.  அந்த ஸ்டுடியோ அரசுக்கு சொந்தமானது. அவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன். அந்த தயாரிப்பாளர் மகனின் லீலை புகைப்படங்களை விரைவில் வெளியிடுவேன். அதுவே என் பிரம்மாஸ்திரம்” எனக் கூறி ஸ்ரீரெட்டி மீண்டும் தெலுங்கு பட உலகில் பரபரப்பை கூட்டினார்.
 
இந்நிலையில், உறவு வைத்துக்கொள்ள ஸ்டுடியோக்கள்தான் பாதுகாப்பான இடம். அங்கு எந்த தொந்தரவு இருக்காது. போலீசார் வரமாட்டார்கள்.  எனவே, நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் ஸ்டுடியோக்களை விபச்சாரம் செய்ய பயன்படுத்துகிறார்கள். அரசும் இதை கண்டுகொள்ளாது. தெலுங்கு நடிகைகள் பலர் இதற்கு மறுப்பார்கள். ஆனால், வட நாட்டிலிருந்து வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கு செல்கிறது. 

 
இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் எனக்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வாய்ப்பு கேட்ட என்னை நிர்வாணமாக வீடியோ சாட் செய்ய சொன்னார்கள். புகைப்படமும் அனுப்ப சொன்னார்கள். நான் அனைத்தையும் செய்தேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. அவற்றை விரைவில் வெளியிடுவேன்” என ஸ்ரீரெட்டி கூறினார்.
 
இப்படி தொடர்ந்து தெலுங்கு பட உலகை பற்றி நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறி வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்