பொது இடங்களில் எச்சில் துப்பினால், சிறுநீர் கழித்தால் ரூ.1,000 அபராதம்!

சனி, 18 ஏப்ரல் 2020 (16:01 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 14,378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  1992 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 480 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டு மக்களைக் காப்பாற்ற நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் நெற்றைய நிலவரப்படி சுமார் 1640 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,   டெல்லியில் இரண்டு தலைமைக் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று , அம்மாநில அரசு டெல்லியில் பொது இடங்களில் எச்சில் துப்பில் சிறுநீர் கழித்தால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்