தாய்மொழியில் பேசக்கூடாது: உத்தரவை வாபஸ் பெற்றது டெல்லி மருத்துவமனை!

ஞாயிறு, 6 ஜூன் 2021 (16:16 IST)
தாய்மொழியில் பேசக்கூடாது: உத்தரவை வாபஸ் பெற்றது டெல்லி மருத்துவமனை!
டெல்லியில் உள்ள ஜிபி மருத்துவனை நிர்வாகம், தங்களது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் தாய் மொழியில் பேசக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் சிலர் தாய்மொழியில் தங்களுக்குள்ளும் சில நோயாளிகளிடம் பேசியுள்ளனர். இது குறித்து ஏற்கனவே எச்சரிக்கை செய்து இருந்த மருத்துவமனை நிர்வாகம், நேற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே செவிலியர்கள் பேச வேண்டும் என்றும் தாய் மொழியில் பேச கூடாது என்றும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது 
 
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த செவிலியர்கள் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த நிலையில் டெல்லி மருத்துவமனையின் சுற்றறிக்கைக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பலர் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்
 
இந்த நிலையில் தற்போது அந்த மருத்துவமனை தனது அறிக்கையை வாபஸ் பெற்றுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே செவிலியர்கள் பேச வேண்டுமென மருத்துவமனை நிர்வாக உத்தரவு பிறப்பித்த நிலையில் கடும் கண்டனம் எழுந்த நிலையில் உத்தரவை வாபஸ் பெறுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்