பொதுவாக தங்கத்தை நகையாக வாங்கினால் அதில் செய்கூலி சேதாரம் என்று ஒரு குறிப்பிட்ட சதவீதம் வீணாகிவிடும். எனவே தங்க பத்திர திட்டத்தில் தங்கத்தை வாங்கி வைத்தால் அதற்கு ஒவ்வொரு வருடமும் இரண்டரை சதவீதம் வட்டி தருவது மட்டுமின்றி முதிர்வின்போது அன்றைய நாளில் தங்கத்தின் விலை என்னவோ அந்த விலை நமக்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி செய்கூலி, சேதாரம் என்ற எந்தவிதமான கூடுதல் செலவும் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இருக்காது.
எனவேதான் தங்கத்தின் முதலீடு செய்பவர்கள் தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதில் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால் இந்த திட்டத்தில் முதலீடு செய்துவிட்டால் 8 ஆண்டுகளுக்கு அதை எடுக்க முடியாது, 5 ஆண்டுகள் கழித்து விருப்பத்தின் பேரில் எடுத்துக் கொள்ளலாம்.