மோடி இமயமலை செல்லும் நேரம் வந்தாச்சு: தனிஒருவன் ஜிக்னேஷ் மேவானி!!

புதன், 20 டிசம்பர் 2017 (15:52 IST)
குஜராத் மாநில தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிவுகள் வெளியானது. பாஜக குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அது பாஜகவின் உண்மையான வெற்றி அல்ல. குஜராத் வாட்காம் தொகுதியில் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டார். இவர் பாஜக வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை தவிர்த்து ஹர்திக் பட்டேல், அல்பேஷ் தாக்குர் ஆகியோரும் குஜராத் தேர்தலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தினர்.
 
குஜராத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் புதிய ஆதர்ச நாயகனாக இவர் உருவெடுத்துள்ளார். தனது வெற்றி குறித்து ஜிக்னேஷ் மேவானி பின்வருமாறு பேசினார். குஜராத்தில் 150 இடங்களில் வெல்வோம் என பேசினார்கள். ஆனால் அவர்களது கனவு தகர்ந்து போனது. 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் இதுதான் நடக்க போகிறது. எங்கள் இயக்கத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. 
 
இனிவரும் நாட்களில் சட்டசபையிலும் வீதிகளும் எங்களது செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும். பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு இமயமலைக்குப் போய்விட வேண்டியதுதான் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்