இந்து மதத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றுகிறேன்: சங்கராச்சாரியார் அறிவிப்பால் பரபரப்பு..!

Siva

திங்கள், 5 மே 2025 (07:49 IST)
ராகுல் காந்தி இந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதால் அவரை இந்து மதத்தில் இருந்து வெளியேற்றுகிறேன் என சங்கராச்சாரியார் அபிமுதேஸ்வரானந்த் என்பவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் மேலும் இது குறித்து கூறிய போது ’பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி மனுஸ்மிருதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சனாதன தர்மத்தை அவமதித்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு கேட்ட நிலையில் ராகுல் காந்தி இதுவரை பதில் அளிக்கவில்லை.

எனவே ராகுல் காந்தி இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டார் என்பதால் அவர் ஒரு இந்து இல்லை என அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் ராகுல் காந்தி முதலில் ஆளும் கட்சியை விமர்சனம் செய்தார், பின்னர் மனுஸ்மிருதியை விமர்சித்தார். இதன் மூலம் அவர் தன்னை ஒரு இந்துவாக கருதவில்லை என்பதை வெளியே வெளிப்படுத்துகிறார்.

மனுஸ்மிருதியை நூலாக ஏற்காத ஒருவரை இந்துவாக கருத முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ராகுல் காந்தி தரப்பிலிருந்து என்ன பதில் வரப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்