ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகாவத் நேற்று நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய போது, இந்து மதத்தில் நீண்ட காலமாக அகிம்சை கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த கொள்கைகளை பலரும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, அதன்படி வழி நடத்து வருகின்றனர். சிலர் இந்த கொள்கைகளை ஏற்காமல், தொடர்ந்து பிரச்சனையை தூண்டிவிடுகின்றனர்.
இந்த நிலையில் எதிரிகளால் வீழ்த்தப்படாமல் இருப்பதும் தர்மத்தின் ஒரு பகுதி என்று இந்து மதம் தெரிவிக்கிறது. குண்டர்களுக்கு பாடம் கற்பிப்பதும் நமது கடமையின் ஒரு பகுதியாக இருப்பதால், நமக்கு பிரச்சனை தருபவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், மக்களை காப்பது தான் ஒரு அரசரின் கடமை. இந்தியா ஒருபோதும் எந்த ஒரு நாட்டிற்கும் தீங்கிழைத்ததில்லை. இந்தியா மற்ற நாடுகளை இழிவு படுத்தியதும் இல்லை. ஆனால், இந்தியாவுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்று யாராவது கருதினால், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். மக்களை காத்து, அரசன் தன் கடமையை செய்ய வேண்டும்.
அகிம்சை என்பது இந்து மதம் கடைபிடிக்கும் ஒரு அம்சம் என்றாலும், மக்களுக்கு ஆபத்து என்றால், அகிம்சையை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.