கேரள ஆளுநரை முற்றுகையிட்ட SFI அமைப்பினர்

Sinoj

சனி, 27 ஜனவரி 2024 (13:03 IST)
கேரளம் மாநிலத்தில் ஆளுநர் ஆரிப் கானுக்கு கருப்புக்கொடி காட்டி இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் இம்மாநிலத்தில் ஆளுநராக ஆரிப் கான் உள்ளார். இந்த நிலையில்,  கொல்லத்தில் ஆளுநர் ஆரிப் கானுக்கு கருப்புக் கொடி காட்டி இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

அப்போது ஆளுனர் ஆரிப் கான் திடீரென்று தன் காரில் இருந்து இறங்கி, போராட்டக் காரர்களை நோக்கிச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதன்பின்னர், அங்குள்ள தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய ஆளுநர் ஆரிப் கான், போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்வரை இங்கிருந்து நான் செல்லப்போவதில்லை என்று அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்