மின்னணு பரிவர்த்தனை செய்தால் தள்ளுபடி - அருண்ஜெட்லி அறிவிப்பு

வியாழன், 8 டிசம்பர் 2016 (18:53 IST)
மக்களிடம் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி அறிவித்தார். அதன் பின் பணம் இல்லாத பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.


 

 
அதன்படி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தினால் விதிக்கப்படும் 15 சதவீத சேவை வரியை மத்திய அரசு ரத்து செய்தது. தற்போது மேலும் சில புதிய தள்ளுபடி சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
அதன்படி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி பெட்ரோல் டீசல் வாங்கினால் 0.75 சதவீதமும், புறநகர் ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்கினால் 0.5 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி இன்று அறிவித்துள்ளார்.
 
மேலும், மின்னனு முறையில் (ஆன்லைன்) ரயில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் எனவும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கார்டு மூலம் கட்டணம் செலுத்தினால் 10 சதவீதமும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மின்னனு முறையில் பணம் செலுத்தினால் சேவை கட்டனம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்