சேவைக் கட்டணம் செலுத்துவது கட்டாயம் இல்லை: மத்திய அரசு

திங்கள், 2 ஜனவரி 2017 (19:57 IST)
ஓட்டல்களில் சேவைக் கட்டணம் செலுத்துவது கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 

 
ஓட்டல்களில் கூடுதல் சேவை கட்டணம் வசிப்பதாக மத்திய நுகர்வோர் நல வாரியத்திற்கு பல்வேறு புகார்கள் தொடர்சியாக சென்றுள்ளது. சேவை நன்றாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் சேவைக் கட்டணம் கட்டாயப்படுத்தி வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளில் புகார்கள் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், ஓட்டல்களில் சேவைக் கட்டணம் செலுத்துவது கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-1986-யில் கூறப்பட்டுள்ள விதிகளை ஓட்டல்கள் முறையாக பின்பற்றுகிறதா என்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
 
விதிகளின் படி சேவை கட்டணம் என்பது வாடிக்கையாளர்களின் விருப்பம். சேவை திருப்தியாக இல்லை என்றால் சேவை கட்டணத்தை தவிர்க்கலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்