பிரதமர் மோடிக்கு நீங்களும் நேரடியாக அனுப்பலாம் கடிதம்

வியாழன், 28 மே 2015 (05:35 IST)
பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் இ - மெயில் மூலம் கடிதம் அனுப்ப, எளிமையாகவும், அதே  வேளையில் மிகவும் புதுமையாகவும் அவரது இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில், புதிய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களை கவர்வதில் பிரமதர் மோடிக்கு இணை யாருமில்லை என்றே கூறலாம். சமுகவலை தளங்களான ட்டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பல முக்கிய கருத்துகளை கூறியும், பலரும் பின்தொடரும் வகையில் உலகமே போற்றும் வகையில் பெரும் சாதனையே படைத்துவிட்டார்.   
 
மேலும், தனது அன்றாட நிகழ்வுகளான தலைவர்களுக்கு புகழாரம், மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி, முக்கிய பிரபலங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், ஆன்மீக விழாக்கள், பாஜக பொதுக் கூட்டம், புதிய விருந்தினர்கள் சந்திப்பு என 
தனது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஒன்றுவிடாமல் அழகிய வடிவில் பதிவு செய்துவிடுகிறார்  மோடி.    
 
இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தின் இணையதளம் புதிய வடிவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதில்,  பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் வகையில் அதன் வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
 
அதின், ஒரு பகுதியில், புதியபுதிய யோசனைகள், கருத்துகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளலாம். அது போலவே, மற்றொரு பகுதியில், பிரதமர் மோடிக்கு நேரடியாகவே இ - மெயில் மூலம் கடிதம் அனுப்பலாம்.
 
இதன்மூலம், பொது மக்கள் யார் வேண்டுமானாலும், முறைப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாகவே தொடர்பு கொள்ளும் வகையில் இ - மெயில் மூலம் கடிதம் அனுப்ப முடியும். 
 
உலக வரலாற்றில், தேசத்தின் பொது மக்கள் ஜாதி, மதம், அரசியல் பாகுபாடு இன்றி நேரடியாக பிரமதமரை தொடர்பு கொள்ளும் வகையில் செய்து, மோடி சாதனை படைத்துள்ளார் என்றே கூறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்