விஞ்ஞான் பிரசார் ( அறிவியல் பிரசாரம்) என்ற அமைப்பு தோன்றி சுமார் 32 ஆண்டுகள் ஆகிறது. இது அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையைச் சார்ந்தது ஆகும். இந்த அமைப்பு டோக்ரி, காஷ்மீரி, உருது, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடா, தமிழ், தெலுங்கு, பெங்காளி, நேபாளி, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளைத் தேர்வு செய்து அந்த மொழிகளில் தனது அறிவியல் மற்றும் அறிவுரைகளைப் பரப்பி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் பாஷா என்ற செயல்திட்டத்தின் கீழ் இந்தியாவில் பெரும்பாலான மொழிகளில் விஞ்ஞான் பிரசார் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது.