பீஹார் மாநிலத்தில் உள்ள பள்ளிமாணவர்களான குரு சரன் விஸ்வாஸ் மற்றும் ஆஷிஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு பள்ளியில் சார்பில் கிராமின் வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதுபோல மாணவர்களுக்காக உருவாக்கப்படும் கணக்கில் சீருடை மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள் வாங்குவதற்காக இந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வருகிறது.