இதற்குகூடவா லஞ்சம்?- சிக்கிக்கொண்ட தலைமை ஆசிரியர்- வீடியோ

செவ்வாய், 14 மார்ச் 2017 (12:50 IST)
ஹைதராபாத்தில் உள்ளது புனித ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவனுக்கு வருகை பதிவு குறைவாக இருப்பதாக தெரிகிறது. மேலும் இண்டர்னல் தேர்வுக்கும் வரவில்லையாம். இதையடுத்து மாணவன் தனது  பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வந்தார். அப்போது பேசிய தலைமை ஆசிரியர் மாணவனின் வருகை பதிவு உள்ளிட்டவைகளை சரி செய்ய ரூ.30,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

அந்த வீடியோவை மாணவனின் பெற்றோர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


 

வெப்துனியாவைப் படிக்கவும்