விஜய் மல்லையா உட்பட 63 பேர்களின் ரூ. 7016 கோடி அதிரடி தள்ளுபடி

புதன், 16 நவம்பர் 2016 (16:37 IST)
விஜய் மல்லையா, கே.எஸ். ஆயில், சூர்யா பார்மஸி, சாய் இன்ஃபோ சிஸ்டம் உள்ளிட்ட 63 பெரு முதலாளிகள் கட்ட வேண்டிய ரூ. 7016 கோடியை ஸ்டேட் ஆஃப் இந்தியா தள்ளுபடி செய்ய உள்ளது.


 

‘கிங் பிஷர்’ மதுபான ஆலை அதிபரான விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில ரூ. 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனை வாங்கி விட்டு, அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார். விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளி என்று பணமோசடி தடுப்பு நீதிமன்றமும் அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில், விஜய் மல்லையாவின் வராக்கடன் ரூ. 1201 கோடி உட்பட 63 பெருமுதலாளிகளின் வாராக்கடன் ரூ. 7016 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. 30-6-16 வரை அந்த வங்கி மட்டும் ரூ 48000 கோடியை தள்ளுபடி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், கே.எஸ். ஆயில் நிறுவனத்தின் 596 கோடி ரூபாய், சூர்யா பார்மஸி நிறுவனத்தின் 526 கோடி ரூபாய், கெட் பவர் நிறுவனத்தின் 400 கோடி ரூபாய், சாய் இன்ஃபோ சிஸ்டம் செலுத்த வேண்டிய 376 கோடி ரூபாயும் இதில் அடங்கும். இந்த தகவலை டி.என்.ஏ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்