உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜக மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 273 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜகவுக்கு பெரும் போட்டியாக விளங்கிய சமாஜ்வாடி கட்சி கூட்டணி 111 இடங்களை கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து கிண்டலாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் “நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், அகிலேஷ் யாதவின் இடங்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளது. மாயாவதி மற்றும் ஓவைசி பாஜகவின் வெற்றிக்கு பெரும் பங்களித்துள்ளனர். எனவே அவர்களுக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட வேண்டும்” என கிண்டலாக கூறியுள்ளார்.