சமீப காலமாக தாங்கள் சந்திந்த பாலியல் தொந்தரவுகள் பற்றி நடிகைகள், மாடல்கள் என பல பெண்கள், சமூக வலைத்தளங்களில் ‘மீ டூ’ என்கிற ஹேஸ்டேக் மூலம் தைரியமாக பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை சஞ்சனா ஆனே, தான் சந்தித்த பாலியல் தொல்லை பற்றி கூறியுள்ளார். நான் மாடலிங் செய்து கொண்டே சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தேன். அப்போது ‘சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்கு தெரியும்’ என ஒரு இயக்குனர் என்னிடம் சூசகமாக பேசினார். ஆனால், அவர் கூறியது என்ன என்பது அப்போது எனக்கு தெரியவில்லை.