இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பண நோட்டுகள் திரும்பவில்லை என அரசு விளக்கமளித்துள்ளது.
2016ம் ஆண்டில் இந்தியாவில் பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்ட நிலையில் புதிய ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதன் பயன்பாட்டு பிரச்சினை காரணமாக நாளடைவில் அது திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது குறித்த விவரங்களை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி வெளியிட்டார். அதில் கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற முடிவு செய்யப்ப்பட்ட நிலையில், முன்னதாக ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு கடந்த ஜூலையில் ரூ6,017 கோடியாக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ரூ.6,017 மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கிக்கு திரும்பவில்லை என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K