பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

Mahendran

செவ்வாய், 21 மே 2024 (11:29 IST)
பிரியங்கா காந்தியின் மகளுக்கு 3000 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவு செய்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பிரியங்கா காந்தியின் மகளுக்கு ரூ.3000 கோடி சொத்து இருப்பதாக தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்துள்ளார். இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் பிரியங்கா காந்தி மகள் குறித்து ஆதாரம் இல்லாத பதிவை செய்ததற்காக அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியை களங்கம் செய்வதற்காக இந்த பதிவு வெளியாகியுள்ளது என்றும் குறிப்பாக  பிரியங்கா காந்தி குடும்பத்தை அவதூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்த பொய்யான தகவலால் மக்கள் கோபமடைந்துள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சி மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. 
 
இதை அடுத்து அவதூறு பதிவை செய்த அனுப் வர்மா என்பவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்