ஊரடங்கு உங்களுக்குதான் எங்களுக்கு இல்லை: ஜாலி விசிட் அடித்த காண்டாமிருகம்
திங்கள், 6 ஏப்ரல் 2020 (15:19 IST)
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடியுள்ள சாலைகளில் ஜாலியாக உலா வர தொடங்கியுள்ள காட்டு மிருகங்கள்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்து முக்கிய சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் அமைதியாக கிடக்கும் சாலைகளிலும், தெருக்களிலும் காட்டு விலங்குகள் நடமாட தொடங்கியுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கேரளாவில் சாலை ஒன்றில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட காட்டு விலங்கு ஒன்று நடமாடும் வீடியோ வெளியாகி வைரலானது. அதை தொடர்ந்து தெருக்களில் ஜாலி விசிட் அடித்த மான்கள், சாலையில் வாக்கி போன யானை, கடற்கறையில் குளித்து மகிழ்ந்த ஒட்டகங்கள் என தொடர்ந்து பல வீடியோக்கள் வெளியாகி வந்தன.
அந்த வகையில் தற்போது நேபாளத்தில் உள்ள சிட்வான் தேசிய பூங்காவிலிருந்து சாலைக்கு வந்த காண்டாமிருகம் ஒன்று ஜாலியாக ஊர் சுற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
So this #rhino thought to take things in his own hand. Went for an inspection. Btw rhino venturing out from forest happens a lot, even without lockdown. Forward. pic.twitter.com/Ck1sft3Emb
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 6, 2020