'டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி.. ரூ.1.19 கோடி இழந்த ஓய்வுபெற்ற அதிகாரி அதிர்ச்சியில் மரணம்!

Siva

வியாழன், 30 அக்டோபர் 2025 (16:08 IST)
புனேவை சேர்ந்த 82 வயது ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர், மும்பை இணைய குற்றப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்த மோசடி கும்பலால் ரூ.1.19 கோடி இழந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
 
மோசடி கும்பல், அந்த முதியவரையும் அவரது 80 வயது மனைவியையும் பணமோசடி வழக்கில் சிக்கியதாக நம்பவைத்து, மூன்று நாட்களுக்கு தொலைபேசி கேமரா மூலம் 'டிஜிட்டல் கைது' செய்தது. இந்த மிரட்டலால், தம்பதியினர் தங்கள் சேமிப்பு முழுவதையும் ஐந்து வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.
 
மோசடி மற்றும் தொடர்ச்சியான தொல்லைகளால் ஏற்பட்ட மன அழுத்தமே மரணத்திற்கு காரணம் என்று மனைவியின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் இழந்த அதிர்ச்சியில் அவர் அக்டோபர் 22 அன்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
 
தொலைபேசி அழைப்புகள் மூலம் யாரையும் கைது செய்ய முடியாது என்றும், தனிப்பட்ட விவரங்கள் அல்லது பணத்தைக் கோரும் அழைப்புகளை உடனடியாக உள்ளூர் போலீஸாரிடம் சரிபார்க்க வேண்டும் என்றும் இணையக்குற்றவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்