விரைவில் ரூ.200 நோட்டுகள்: அச்சிடும் பணிகளை துவங்கியது ஆர்பிஐ!!

வியாழன், 29 ஜூன் 2017 (11:39 IST)
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பணப்புழக்கத்தை எளிதாக்கும் நோக்கத்தில் ரூ.200 நோட்டுகளை அறிமுக செய்யவுள்ளது. இதற்கான அச்சிடும் பணிகளையும் துவங்கியுள்ளது.


 
 
கருப்பு பணத்தை மீட்பதற்காக கடந்த ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது, புதிய 500 மர்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. 
 
இதனால் பணப்புழக்கத்திலும், சில்லைரகளுக்கும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், சில கட்டுபாடுகளோடு இது சரியசெய்யப்பட்டாலும் இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை.
 
இந்நிலையில், ஆர்பிஐ புதிய ரூ.200 நோட்டுகளை அச்சிடும் பணியை தொடங்கியுள்ளது. கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றன.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்