மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்துக்கு ரத்தன் டாடா பெயர்: மாநில அரசு அறிவிப்பு

Mahendran

திங்கள், 14 அக்டோபர் 2024 (14:36 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர் வைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் திறன் மேம்பாட்டு கழகத்தின் பெயரை இனி "ரத்தன் டாடா மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டு கழகம்" என்று மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ரத்தன் டாடாவுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு முன்மொழிந்து, மகாராஷ்டிரா மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ரத்தன் டாடாவின் சமூக பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டு கழகத்தின் பெயரை "ரத்தன் டாடா மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டு கழகம்" என மாற்றியிருப்பதாக நம் மாநில அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 ரத்தன் டாடா மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை கௌரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்