’ரேபிட் டெஸ்ட் கருவி ’பரிசோதனையை நிறுத்தி வைத்த ராஜஸ்தான் அரசு !

செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (16:52 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கொரொனா பாதிக்க்கப்பட்டவர்களை அறிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை மத்திய, மாநில அரசுகள் பெரிதும் நம்பி வந்தன. இந்தக் கருவிகள் மூலம் விரைவில் கொரொனா முடிவிகள் வந்துவிடும் என்பதால் மாநில அரசுகள் இறக்குமதி செய்தனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில்,ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால், தற்போதைக்கு பரிசோதனை முடிவுகள் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த தகவலின்படி இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்