காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கி காஷ்மீரை இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்படுத்த மத்திய அரசு மசோதா தாக்கல் செய்திருக்கிறது. மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா தற்போது மக்களவையில் விவாதத்தில் இருக்கிறது. பாஜக மக்களவையில் பெரும்பான்மை பெற்றிருப்பதால் அங்கும் மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி “ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிப்பதன் மூலமோ, மக்கள் பிரதிநிகளை சிறையில் அடைப்பதன் மூலமோ, அரசியலமைப்பு சட்டத்தை நீக்குவதன் மூலமோ தேசத்தை ஒருங்கிணைத்து விட முடியாது. தேசம் என்பது எல்லைகளால் ஆனது அல்ல. மக்களால் ஆனது. ஜனநாயகத்தை மீறிய இந்த செயலால் நாட்டின் பாதுகாப்பில் மோசமான பாதிப்புகள் ஏற்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.