செல்போனை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல.. குற்றவாளிகள், திருடர்கள் செய்யும் செயல் என எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய மெசேஜ் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்களான சி.பி.ஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் , திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா, சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த (யுபிடி) பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா எம்பி, காங்கிரஸ் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான பவன் கேரா மற்றும் தி வயர் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் ஆகியோர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.