செல்போன் பறிப்பால் உயிரிழந்த இளம்பெண்.. குற்றவாளியை சுட்டுக்கொன்ற போலீசார்..!

திங்கள், 30 அக்டோபர் 2023 (16:46 IST)
இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பின்போது இளம்பெண் உயிரிழந்த நிலையில் அந்த பெண்ணிடம் செல்போன் பறித்த கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் சென்ற செல்போன் திருடர்கள் அந்த பெண்ணிடம் செல்போனை பறிக்க முயன்றனர்.

அப்போது அந்த பெண் செல்போனை பாதுகாக்க போராடிய நிலையில் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் இளம் பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செல்போனை பறித்துக்கொண்டு குற்றவாளிகள் தப்பித்து சென்ற போது போலீசார் அவர்களை விரட்டினர். அப்போது குற்றவாளிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீசார் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியதில் ஜித்து என்ற குற்றவாளி உயிரிழந்ததாகவும் பல்வீர் என்பவர் படுகாயம் அடைந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்