ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி காங்கிரஸ் அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது என்றும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டங்கள் எல்லாம் நிறுத்தப்படும் என்றும் அதானி வளர்ச்சிக்கு மட்டுமே பாஜகவின் திட்டங்கள் இருக்கும் என்றும் ஏழைகளுக்கு எதுவும் கிடைக்காது என்றும் கூறினார்.
காங்கிரஸ் அரசு ஏழைகளை பாதுகாத்து வருகிறது என்றும் ஆனால் மத்தியில் உள்ள பாஜக அரசு ஏழைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில்கள் அழிந்தன என்றும் விமான நிலையம், துறைமுகம், சிமெண்ட் நிறுவனங்கள் எல்லாம் அதானி கைக்கு சென்று விட்டது என்றும் எனவே பாஜகவை வெற்றி பெறச் செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.