நாங்கள் எதை செய்தாலும் ஒன்றாகவே செய்வோம்.. மோடி, அதானி முகமூடி அணிந்த எம்பிக்கள்..!

Siva

திங்கள், 9 டிசம்பர் 2024 (16:56 IST)
நாங்கள் எதைச் செய்தாலும் ஒன்றாகவே செய்வோம் என மோடி அதானி முகமூடி அணிந்த காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தியிடம் கிண்டலாக கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்பிகள் அமளியில் ஈடுபட்டு வருவதும் அதன் பின் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்றும் அதானி விவகாரம் குறித்து முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்திய நிலையில் மோடி மற்றும் அதானி முகமூடி அடைந்த காங்கிரஸ் எம்பிக்கள் கேலி செய்தனர். அதானி முகமூடி அணிந்த எம்பிக்களிடம் ராகுல் காந்தி உங்கள் இருவருக்கும் என்ன தொடர்பு என கேட்க, அதற்கு அதானி  முகமூடி அணிந்த எம்பி ‘நாங்கள் எதை செய்தாலும் ஒன்றாகவே செய்வோம் எங்களுடைய பல ஆண்டுகளாக உறவு இருந்து வருகிறது என்று கிண்டலாக பதில் அளித்தனர்.

மேலும் அதானி முகமூடி அணிந்த மாணிக்கம் தாகூர் எம்பி, ‘ நான் என்ன சொன்னாலும் அதை இவர் செய்வார் என மோடி முகமூடி அணிந்த எம்பி ஐ பார்த்து கூறினார். இதுகுறித்த வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிகள் நடத்திய போராட்டத்தில் சமாஜ்வாதி ஜனதா கட்சி,  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய வாத காங்கிரஸ் கட்சி எம்பிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்