குறிப்பாக கடவுள் சிவன் படத்தைக் காட்டி எனது இன்றைய உரையை தொடங்குகிறேன், இந்த படத்தை இங்கே ஏன் காண்பிக்கிறேன் என்றால் இதில் உள்ள யோசனைகளை எதிர்க்கட்சிகளாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இது குறித்து தான் நடிகை கங்கனா ரனாவத் எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளது பொறுப்பற்ற கருத்துக்கள் என்றும், ஒரு ராகுல் ஆக அல்ல இருவராக உள்ளார் என்றும் உடனடியாக அவர் மனநல ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு குடும்பத்தில் இருந்து ஏதாவது அழுத்தங்கள் இருந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். கங்கனாவின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.