ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

Mahendran

வியாழன், 15 மே 2025 (13:25 IST)
பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் மாணவர்களை சந்திக்க சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பீகார் மாநிலத்தில் அம்பேத்கர் விடுதியில் மாணவர்களுடன் உரையாடும் திட்டத்துடன் வந்த ராகுல் காந்தி, போலீசாரால்; தடுத்து நிறுத்தப்பட்டார்.  இதனால் காவல்துறையும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 
ஆனால், காவல் தடை இருந்த போதும், ராகுல் காந்தி அந்த தடையை மீறி நடந்து மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். “பிகார் காவல்துறை என்னை தடுப்பதற்கு முயன்றது. ஆனால் அவர்கள் என்னை தடுக்க முடியவில்லை. காரணம், உங்கள் சக்தி என்னைக் கண்காணித்து, முன்னேற்றம் தருகிறது,” என்று அவர் கூறினார்.
 
மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டோம், அதன் விளைவாக சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை மேற்கொள்ள பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
 
ராகுல் காந்தி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, “தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை சந்திக்க பீகார் அரசு என்னை தடுக்கிறது. பீகாரின் முதல்வர் நிதீஷ் குமார், நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? மாநிலத்தின் கல்வி வளர்ச்சியும் சமூக நீதியும் மறைக்க விரும்புகிறீர்களா?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்