1984 சீக்கியக் கலவரம் பற்றி சர்ச்சைப் பேச்சு – கட்சி பொறுப்பாளரை மன்னிப்புக் கேட்க வைத்த ராகுல் !

சனி, 11 மே 2019 (12:30 IST)
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதுமே அரசியல பிரச்சனைகள் அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொருக் கட்சியும் மற்றக் கட்சியினரை விமர்சனம் செய்வது அதிமாகியுள்ளது. அந்த வகையில் காங்கிரஸை விமர்சிக்க பாஜக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 1984 சீக்கியக் கலவரத்தைக் கையில் எடுத்து பேசியது. 1984 ஆம் ஆணடு நடைபெற்ற சீக்கியக் கலவரத்துக்கு ராஜீவ் காந்தி அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனக் கூறியது.

இதற்குப் பதிலளித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் சாம் பித்ரோடா ‘1984 –ல் நடந்தது பற்றி இப்போது என்ன கவலை. கடந்த 5 ஆண்டில் நடந்ததைப் பற்றி பேசுங்கள். 1984-ல் நடந்தது நடந்துவிட்டது’ என விட்டேத்தியாகக் கூறினார். இதற்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘ சாம் பித்ரோடாவின் கருத்து தேவையில்லாதது. அவர் இதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். 1984 –ல் நடந்த சோக நிகழ்வு மக்கள் மனதில் மிகப்பெரிய வலியை உருவாக்கியுள்ளது.’ எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து சாம் பித்ரோ தனது பேச்சுக்காக மன்னிப்புக்கேட்டுள்ளார். 1984-ல் சீக்கிய காவலாளி ஒருவரால் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். அதனையடுத்து டெல்லி மற்றும் பஞ்சப்பில் உள்ள சீக்கிய மக்கள் மீது வன்முறைக் கட்டவிழ்த்து விடப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்