மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 3,15,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கேரள மக்களுக்கு உதவ முன் வர வேண்டுமென, கேரள முதல்வர் பினராயி விஜயன் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன்படி கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி, கேரளாவிற்கு முதல்கட்டமாக 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34.89 கோடி) நிவாரண நிதி வழங்குவதாக நேற்று அறிவித்தார். இந்த தொகையானது இந்தியாவிடம் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. அது விரைவில் கேரள மக்களை சென்றடையும். பேரழிவால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள சொந்தங்களை காப்பாற்ற எங்களால் முடிந்த உதவியை செய்துள்ளோம் என கத்தார் மன்னர் தெரிவித்துள்ளார்.