இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு ரஷ்ய அதிபர் வரவில்லையா? என்ன காரணம்?

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (17:35 IST)
இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் ஜி 20 மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் அதில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஜி 20 மாநாட்டை இந்தியா இந்த ஆண்டு நடத்தும் நிலையில் இதில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் அதிபர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் நடக்க உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ள மாட்டார் என்றும் இந்தியாவுக்கு வருவதற்கான எந்த திட்டமும் இல்லை என்றும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் காணொளி வாயிலாக கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டிலும் அவர் காணொளி வாயிலாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்