தோனியின் ஒரு இன்னிங்ஸ் மட்டும் போதாது... உலகக் கோப்பை குறித்து கம்பீர் ஆதங்கம்!

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (07:08 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். அதிலும் இவர் தோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் என்பதால் இருவரின் ரசிகர்களாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கோலி, இறுதி போட்டியில் மிக முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார். ஆனால் அந்த போட்டியில் தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போதே அது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது அவர் உலகக் கோப்பை வென்றது பற்றி “2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தோனியின் இன்னிங்ஸை மட்டுமே அனைவரும் கொண்டாடுகிறோம். அந்த இன்னிங்ஸ் மட்டுமே கோப்பையை வெல்வதற்கு போதுமானதல்ல. அந்த தொடரில் சிறப்பாக விளையாடிய யுவராஜ், சச்சின், ஹர்பஜன் மற்றும் ரெய்னா ஆகியோரின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களைக் கொண்டாட தவறுகிறோம். தனி நபர்களைக் கொண்டாடும் போக்கு அதிகமாகியுள்ளது. அதனால் முக்கிய வீரர்களின் பங்களிப்பு கவனிப்பில்லாமல் போகிறது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்