ஆனால் இது குறித்து நடுநிலை வாக்காளர்கள் கூறியபோது, பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து கட்சிக்காரர்களும் விவசாயிகளுக்காக கட்சி பேதமின்றி போராடினார்கள் என்றும் அந்த போராட்டம் முடிவடைந்த பின்னர் அவரவர் கட்சிகளுக்கு வேலை பார்த்தார்கள் என்றும் எனவே பாஜகவுக்கு வழக்கமாக வாக்களிக்கும் விவசாயிகள் கண்டிப்பாக பாஜகவுக்கு தான் வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார்