பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளித்தால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

Siva

வெள்ளி, 6 டிசம்பர் 2024 (13:43 IST)
பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளித்தால் 5000 ரூபாய் அபராதம் என்று புனே மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.

பொது இடங்களில் புறா கூட்டங்களுக்கு உணவளிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதை அடுத்து, இதனால் பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக புகார் வந்துள்ளது.

இதனை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாநகராட்சி, பொது இடங்களில் புறா கூட்டங்களுக்கு உணவிடும் நபர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

புறாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் அதன் எச்சங்கள் மூலம் மனிதர்களுக்கு நுரையீரல் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

புறா இறகுகள் மூலம் கிருமிகள் பரவுவதாகவும், அது நுரையீரல் தொடர்பான நோய் பரவுவதோடு உடல் நல அபாயத்தையும் ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மக்களின் சுகாதார பிரச்சனைகளை கணக்கில் எடுத்து, பொது இடங்களில் புறாக்களுக்கு உணவு அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த பிரச்சனைக்கு தீர்வு காண புனே நகரம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டதாகவும், திறந்த வெளியில் புறாக்களுக்கு உணவு அளிப்பதை நிறுத்துமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.

மீறி திறந்த இடத்தில் உணவளித்தால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்