இந்த போராட்டம் குறித்து சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, '▪ஒரு மணி நேரத்தில் முடிக்கக்கூடிய பிரச்சனையை வேண்டுமென்றே கிரண்பேடி தாமதப்படுத்தி வருவதாகவும், புதுச்சேரி ஊதிய உயர்வு, மானியம் உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக அறவழியில் போராட்டம் செய்வதாகவும் கூறினார்.
இந்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய அன்றாட அலுவல்களை சாலையில் அமர்ந்தவாறு செய்து வருகின்றனர் என்பதும், அவர்கள் தங்களுக்கான உணவுகளையும் சாலையில் அமர்ந்தவாறே உண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லி சென்றுள்ள ஆளுனர் கிரண்பேடி இன்று புதுவை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது