அதை மட்டும் செய்தால் தடுப்பூசியின் விலை உயரும்… நிர்மலா சீதாராமன் பதில்!

திங்கள், 10 மே 2021 (11:35 IST)
கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜி எஸ் டியில் இருந்து விலக்கு அளித்தால் தடுப்பூசியின் விலை உயரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டியிலிருந்து தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மேற்குவங்க முதல்வர் மம்தா பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியவர்களுக்கு கடிதம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டியில் இருந்து தடுப்பூசிகளுக்கு விலக்கு அளித்தால் அது எதிரமறை விளைவையே ஏற்படுத்தும். அவ்வாறு செய்தால் ‘ தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் உள்ளீட்டு வரிகளை ஈடுசெய்ய முடியாது மற்றும் விலையை உயர்த்திவிடுவார்கள்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்