தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் வரிசையாக சமுகவலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வரவேற்பைப் பெற்றுவரும் அவர், இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இடுப்பு தெரியும் படி ஆடை அணிந்துள்ள அந்த புகைப்படத்தை பலரும் குஷி படத்தில் விஜய் ஜோதிகாவின் இடுப்பை பார்ப்பது தங்களை பார்க்க வைத்துவிட்டீர்களே எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.