ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

Siva

செவ்வாய், 2 ஜூலை 2024 (07:23 IST)
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பேசிய போது இந்து கடவுளான சிவன் படத்தை காட்டி தனது உரையை தொடங்கினார்.

அப்போது இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வன்முறை வெறுப்பில் ஈடுபடுகிறார்கள் என்றும், வன்முறை செய்பவர்கள் என்றும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் இல்லை என்றும் கூறினார்.

மேலும் இந்து மதம் என்பது பயம் வெறுப்பு பொய்களை பரப்பும் மதம் இல்லை என்றும் கூறிய போது பிரதமர் மோடி, ராகுல் காந்தி பேச்சில் குறுக்கிட்டார்.  ராகுல் காந்தி பேச்சை இந்துக்கள் மீதான தாக்குதல் என்று எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதனை அடுத்து இந்துக்களுக்கு எதிராக ராகுல் காந்தி பேசி விட்டதாக பாஜகவினர் மற்றும் பாஜக கூட்டணி கட்சியினர் கூறும் நிலையில் இதற்கு பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார். தனது சகோதரர் இந்துக்களை அவமதிக்கவில்லை என்றும் ஆனால் காவி கட்சி மற்றும் அதன் தலைவர்களை பற்றி பேசுவதாக தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்.

ராகுலால் இந்துக்களை அவமதிக்க முடியாது என்றும் அவர் அதை மிக தெளிவாக பேசி இருக்கிறார் என்றும் பாஜக மற்றும் அதன் தலைவர்களை பற்றியே பேசினார் என்றும் பாஜக, ஆர்எஸ்எஸ் அல்லது மோடி மட்டுமே முழு இந்து சமுதாயம் அல்ல என்றும் பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்