மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து அதிகளவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இது எதிர்க்கட்சிகளாலும் சமூக ஆர்வலர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து அவரும் அவரது அமைச்சரவையிலும் உள்ள அமைச்சர்களின் பயணச்செலவ்யு எவ்வளவு என்பது குறித்து மும்பையை சேர்ந்த ஆர்டிஐ செயற்பாட்டாளர் அனில் கல்கலி பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
ஒட்டுமொத்தமாக மோடி, கேபினட் அமைச்சர்கள், இணையமைச்சர்களின் உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.393.58 கோடி செலவிட்டுள்ளது. இதுவரை 49 வெளிநாட்டுப் பயணங்களை கடந்த 5 ஆண்டில் மேற்கொண்டுள்ளார்.