ஷூவை நாக்கால் சுத்தப்படுத்த சொல்லி அட்டூழியம் செய்த காவலர்கள்

புதன், 3 ஜனவரி 2018 (12:43 IST)
அகமாதாபாத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவரை, போலீஸார் தங்களின்  ஷூவை நாக்கால் சுத்தம் செய்யச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமாதாபாத்தில் ஹர்சாத் ஜாதவ் (40) என்பவர் வசித்து வருகிறார். டிவி மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் இவர், தனது வீட்டின் அருகேயுள்ள சாய்பாபா கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் ஹர்சாத்தின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹர்சாத் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து ஹர்சாத் குடும்பத்தை கைது செய்த போலீஸார், காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் சக போலீஸார் ஹர்சாத்தின் ஜாதி குறித்து விமர்சித்ததோடு, ஹர்சாத்தின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற போலீசாரின் காலில் விழுந்து ஹர்சாத் மன்னிப்பு கேட்க சொன்னனர்.  காவல் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசாரின் ஷூவையும் நாக்கால் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்படுத்தினர். வேறு வழியின்றி அதனை செய்தார் ஹர்சாத். இச்சம்பவத்தை வெளியில யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.
 
இதனால் மனவேதனையடைந்த ஹர்சாத் இதுகுறித்து கூடுதல் காவல் ஆணையரிடம் முறையிட்டார். இதனைத்தொடர்ந்து ஹார்சாத்தை கொடுமைப்படுத்திய காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்