தமிழில் திருவள்ளுவர் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.. நல்லவேளை புகைப்படம் இல்லை..!

Siva

செவ்வாய், 16 ஜனவரி 2024 (12:00 IST)
ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில் அரசியல்வாதிகள் சில சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் திருவள்ளுவர் வெள்ளை ஆடை அணிந்த புகைப்படத்தை பதிவு செய்து வருவதும் ஒரு சிலர் காவி ஆடை உடைந்த அணிந்த திருவள்ளுவர்  புகைப்படத்தை பதிவு செய்து வருவதும் சர்ச்சையாகி வருகிறது.

இந்த ஆண்டும் அதேபோல் கவர்னர் ரவி அண்ணாமலை உள்ளிட்டோர் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவு செய்து வாழ்த்து கூறிய நிலையில்  ஒரு சிலர் வெள்ளை ஆடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவு செய்து வாழ்த்து கூறியுள்ளனர்.

இந்த நிலையில் எந்தவிதமான புகைப்படத்தை பதிவு செய்யாமல் பிரதமர் மோடி தமிழில் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம்  வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது.  காலத்தால் அழியாத அவரது போதனைகள்   நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த    அனைவருக்குமான விழுமியங்களை தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம்  வலியுறுத்துவோம்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்